உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பேரணி நடத்தினர். போரை நிறுத்துங்கள் என்ற பதாகைகளை ஏந்தியப்டி அவர்கள் புதினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை மாஸ்கோ போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அமெரிக்காவில் நியூ யார்க், லாஜ் ஏஞ்சலீஸ், சான் பிரன்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களில் நடைபெற்றன. சான் பிரன்சிஸ்கோவின் சிட்டி ஹால் என்ற இடத்தில் குழுமிய இளைஞர்கள் புதினுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லம் அருகே, இங்கிலாந்து வாழ் உக்ரைன் மக்களுடன் இணைந்து லண்டன் மக்கள் போராட்டம் நடத்தினர். புதின் தீவிரவாதி என்றும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் முழங்கினர்.
இதையும் படிங்க - அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்... மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர்
ரோம் நகரில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒன்று கூடிய மக்கள், உக்ரைன் மீதான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். உக்ரைன் மக்கள் அமைதியை விரும்புவதாகவும் அதிபர் புதின் அதனை சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதேபோல் ஜெர்மனி தலைநகர் பெர்லின், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யாவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.