முகப்பு /செய்தி /உலகம் / War In Ukraine : உக்ரைனுடன் ரஷ்யா போர்- போலந்தில் அமெரிக்க படைகள் குவிப்பு

War In Ukraine : உக்ரைனுடன் ரஷ்யா போர்- போலந்தில் அமெரிக்க படைகள் குவிப்பு

உக்ரைனில் போர் பதற்றம், போலந்தில் அமெரிக்க படைகள்

உக்ரைனில் போர் பதற்றம், போலந்தில் அமெரிக்க படைகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழன் அன்று உக்ரைனில் ஒரு "இராணுவ நடவடிக்கையை" அறிவித்தது, மேற்கத்திய நாடுகளின் கோபம் மற்றும் போரைத் தொடங்க வேண்டாம் என்ற வேண்டுகோளை உதாசீனப்படுத்தி புதின் தொலைக்காட்சியில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டார். "நான் ஒரு ராணுவ நடவடிக்கை எடுக்கிறேன்” என்ற அறிவிப்புதான் இது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழன் அன்று உக்ரைனில் ஒரு "இராணுவ நடவடிக்கையை" அறிவித்தது, மேற்கத்திய நாடுகளின் கோபம் மற்றும் போரைத் தொடங்க வேண்டாம் என்ற வேண்டுகோளை உதாசீனப்படுத்தி புதின் தொலைக்காட்சியில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டார். "நான் ஒரு ராணுவ நடவடிக்கை எடுக்கிறேன்” என்ற அறிவிப்புதான் இது.

இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 82வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர்கள், நேட்டோ கூட்டாளிகளுக்கு உறுதியளிக்க போலந்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், போலந்து அர்லமோ அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் வீரர்கள் காணப்படுகின்றனர்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை அறிவித்த பின்னர், உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் தனது முதல் அறிக்கையில், “புதின் உக்ரைனுக்கு எதிராக முழு அளவிலான போரைத் தொடங்கியுள்ளார். அமைதியான உக்ரைன் நகரங்களில் தாக்குதல் தொடர்கின்றன. இது ஆக்கிரமிப்புப் போர். உக்ரைன் காத்து வெற்றி பெறும். புதினை உலகம் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். செயல்பட வேண்டிய நேரம் இது” என்றார்.

விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அவசர அவசரமாக மீட்டு வருகிறது உக்ரைன் அரசு. உக்ரைன் மீதான போரையடுத்து கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை கடந்தது உக்ரைனின் KYIV நகரில் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததாக தகவல்.. அதே போல ரஷ்யாவின் பெல்கோரட் மாகாணத்திலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்

நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.. மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Joe biden, Russia - Ukraine, US military, Vladimir Putin