உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்களும் ஒரு ஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரஷ்யாவால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள பிரிவினைவாத பிராந்தியங்களில் லுஹான்ஸ்க் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேனிய ஏர் டிபன்ஸை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததாக ரஷ்யா கூறியது. தகவல்களின்படி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் உடனான உக்ரைனின் வடக்கு எல்லையில் ரஷ்யா பீரங்கித் தாக்குதலை நடத்தியது. உக்ரேனியப் படைகள் திருப்பிச் சுட்டன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிகாலை நடத்திய தொலைக்காட்சி உரையில் உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த ராணுவ நடவடிக்கை உக்ரைனை "ராணுவமயமாக்கல்" செய்ய முயல்கிறது என்றும் உக்ரைனின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இது நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அவர் அறிவித்த சில நிமிடங்களில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தில் உக்ரைன் பிரதிநிதி, "போரை நிறுத்துங்கள்" என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
ரஷ்ய ராணுவ வாகனங்கள் கிரிமியா வழியாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக உக்ரைன் எல்லைக் காவல்படை வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பெலாரஸ் எல்லையிலிருன்ஹ்டு வெளியான லைவ்ஸ்ட்ரீம் வீடியோ உக்ரைனுக்குள் துருப்புக்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் கடப்பதைக் காட்டியது. இந்த வீடியோ உள்ளூர் நேரப்படி காலை 6:48 மணியளவில் உக்ரைனின் சென்கிவ்கா மற்றும் பெலாரஸின் வெசெலோவ்கா ஆகிய இடங்களுக்கு இடையேயான கிராசிங்கில் படமாக்கப்பட்டது.
உக்ரேனிய எல்லைக் காவல்படை சிஎன்என் நிறுவனத்திடம், "பீரங்கி, கனரக உபகரணங்கள் மற்றும் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யா மற்றும் பெலாரஸால் தங்கள் எல்லைகள் தாக்கப்பட்டதாக முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.