Home /News /international /

War in Ukraine: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் பலி: 2ம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவின் இருண்ட நேரம்

War in Ukraine: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் பலி: 2ம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவின் இருண்ட நேரம்

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யப் படைகள் வியாழன் அன்று தரை, வான் மற்றும் கடல் வழியாக உக்ரைன் மீது படையெடுத்துள்ளது. , இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்துவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
    ரஷ்யப் படைகள் வியாழன் அன்று தரை, வான் மற்றும் கடல் வழியாக உக்ரைன் மீது படையெடுத்துள்ளது. , இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்துவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரஷ்ய ஏவுகணைகள் உக்ரேனிய நகரங்கள் மீது பொழிந்தன. உக்ரைன் தனது எல்லைகளைத் தாண்டி கிழக்கு செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளுக்குள் துருப்புக்கள் குவிந்து வருவதாகவும், தெற்கில் உள்ள ஒடெசா மற்றும் மரியுபோல் துறைமுக நகரங்களில் கடல் வழியாக தரையிறங்கியதாகவும் உக்ரைன் அறிவித்தது.

    தலைநகர் கீவில் விடியற்காலையில் வெடிச்சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூடு சத்தம், சைரன்கள் நகரம் முழுவதும் ஒலித்தது மற்றும் பொதுமக்கள் தப்பி ஓட முயன்றதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கிரெம்ளின் தலைவர் விளாடிமிர் புட்டினின் நோக்கம் தனது அரசை அழிப்பதே என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறினார். "இது ஒரு ஆக்கிரமிப்புப் போர். உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும், வெற்றி பெறும். உலகம் புடினைத் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும். செயல்பட வேண்டிய நேரம் இது."

    "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் இருண்ட மணிநேரங்களில் இதுவும் ஒன்றாகும்" என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் கூறினார்.

    உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் உள்ள பெரிய நகரத்தில் வசிப்பவர், தொடர்ச்சியான குண்டுவெடிப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள் அதிர்ந்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

    மரியுபோலுக்கு வெளியே, ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் வைத்திருக்கும் பகுதிகளுக்கு அருகில், ரஷ்ய குண்டுவீச்சினால் குறிவைக்கப்பட்ட காட்டிலிருந்து தீயினால் புகை கிளம்பியது.

    உக்ரேனிய ராணுவக் கவசவண்டி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது, சிப்பாய்கள் அதன் மேல் அமர்ந்து சிரித்துக் கொண்டே வெற்றிச் சின்னங்களை மிளிரும் சைகைகளைக் காட்ட, காரில் செல்பவர்கள் அவர்களுக்கு ஆதரவாக ஹாரன்களை அடித்து உற்சாகம் காட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஏஜென்சி கூறுகிறது.

    அருகிலுள்ள நகரங்களான மங்குஷ் மற்றும் பெர்டியன்ஸ்க்கில் மக்கள் பணம் எடுக்கவும் பெட்ரோலுக்காகவும் நீண்ட வரிசையில் நின்றனர். மரியுபோலைச் சேர்ந்த பொதுமக்கள் விட்டது விட்டபடி தங்களின் செல்லப்பிராணிகளை விட்டு விட்டு பைகளை மூட்டை கட்டிக் கொண்டிருந்தனர். பலர் போலந்துக்கு விரைவதையும் பார்க்க முடிந்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி