உக்ரைனின் ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உச்சபட்ச போர்ப்பதற்றத்தில் உக்ரேனியர்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் , மற்றும் ஆயுதங்களை வாங்க ஆயுதக் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரேனியர்களுக்கு துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் வரைவு சட்டத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்பு அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான உக்ரேனியர்கள் - சிறுவர்கள் மற்றும் பெண்கள் - எப்படி சுடுவது என்பதை பள்ளியிலலேயே கற்றுக்கொள்கிறார்கள். விளாடிமிர் புதின் 2014 இல் கிரிமியாவை இணைத்ததைத் தொடர்ந்து, கிழக்கில் ரஷ்யா ஆதரவுடன் ஆயுதமேந்திய எழுச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைனில் சுமார் 400,000 பேர் போர் பயிற்சி எடுத்து கொண்டதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆந்த்ரீ ஜாக்ரோட்னிக் , துப்பாக்கிகள் நீண்ட காலமாக தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறினார். “மக்கள் பெட்ரோல் நிலையங்களையோ கடைகளையோ முற்றுகையிடவில்லை, ஆனால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களை வாங்குகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி."
ஆனால் சமீப நாட்களில் கெய்வ் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஆயுதங்களை வாங்குவதற்கு முன்னெப்போதும் இல்லாத அவசரத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி கடைகளில் AR-10 மற்றும் AR-15 தாக்குதல் துப்பாக்கிகள் போன்ற சில ஆயுதங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன, வணிகம் இப்போது மிகவும் பிஸியாக உள்ளது.
Stvol துப்பாக்கி கடையில் சுமார் ஒரு டஜன் ஆண்கள் ஒரு கண்ணாடி கவுண்டர் முன் பொறுமையாக காத்திருந்தனர். கடையில் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கேம்பிங் கியர் விற்றுத்தீர்ந்துள்ளன
In 🇺🇦Ukraine, large amounts of ammo is being purchased by civilians, police say.
10,000 firearms items have been registered in February alone. In general, the country has over 700,000 legal gun owners.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, முன்பு மோதல்களின் சாத்தியக்கூறுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. நடமாட்டம், வெகுஜனக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், கச்சேரிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.