ஹோம் /நியூஸ் /உலகம் /

பாறை சரிந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கோர சம்பவம் - 10 பேர் பலி

பாறை சரிந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கோர சம்பவம் - 10 பேர் பலி

Brazil

Brazil

சுற்றுலா பயணிகள் திடீரென மலை போல நின்றுகொண்டிருந்த ஒரு பாறை சுவர் அப்படியே அங்கிருந்த படகுகளின் மீது சரிந்து விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராய்ஸ் ( Minas Gerais) மாகாணத்தில் கேபிடோலியோ (Capitolio) என்ற சுமார் 9,000 பேர் வசித்துவரக் கூடிய சின்னஞ்சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் உலகப் பிரசித்தி பெற்ற Capitolio Canyons என்ற பள்ளத்தாக்கு பகுதி சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. ஃபர்னாஸ் ஆற்றில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கானது பாறைகளால் ஆனது, பாறைகள் சுவர்கள் போல நின்று கொண்டிருக்கும்., இதனை ஃபர்னாஸ் ஆற்றில் படகுகள் மூலம் சென்று அருகாமையில் பார்க்க முடியும். சினிமாக்களில் எல்லாம் வந்துள்ள அந்த பகுதியில் படகு சவாரி செல்வது மிகவும் அலாதியான அனுபவமாக அமையும்.

  வார இறுதி நாட்களில் சுமார் 5,000 பேரும், விடுமுறை தினங்களில் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியில் சுற்றுலா வருவார்கள், இது பிரேசில் நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும்.

  இந்நிலையில். கடந்த சனிக்கிழமையன்று, ஃபர்னாஸ் ஆற்றில் படகு சவாரி மேற்கொண்டு Canyons பாறைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் திடீரென மலை போல நின்றுகொண்டிருந்த ஒரு பாறை சுவர் அப்படியே அங்கிருந்த படகுகளின் மீது சரிந்து விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இருப்பினும் அப்பாறையானது சுற்றுலா பயணிகள் சென்ற படகின் மீது விழுந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

  Also read:  ஓமைக்ரான் ஓர் இயற்கையான தடுப்பூசி: வல்லுனர்களின் நம்பிக்கையா? அபாயகரமான கருத்தா?

  உடனடியாக இது குறித்து அறிந்து உள்ளூர் தீயணைப்பு படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். ஆழ்கடலில் மூழ்கிச் சென்று நீச்சல் அடிக்கும் டைவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

  சுற்றுலா பயணிகள் சென்ற படகு மீது பாறை விழும் சம்பவத்தை அருகாமையில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது மொபையில் வீடியோவாக எடுத்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது., இச்சம்பவத்தில் 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Also read: இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

  கடந்த 2 வாரங்களாக அந்தப் பகுதியில் கனமழை பெய்து வந்ததால், அதன் காரணமாக பாறைகள் பலவீனமடைந்து சரிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இச்சம்பவம் குறித்து விசாரிக்க பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

  Published by:Arun
  First published:

  Tags: Brazil, Tourism