ஹோம் /நியூஸ் /உலகம் /

2021-ம் ஆண்டு வரையில் ப்ரெக்ஸிட்-க்கு வழி இல்லை!

2021-ம் ஆண்டு வரையில் ப்ரெக்ஸிட்-க்கு வழி இல்லை!

தெரேசா மே

தெரேசா மே

சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரேசா மே வெற்றி பெற்றதால், அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல 2021-ம் ஆண்டு வரையில் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு இன்னும் 32 நாள்களே இருக்கும் சூழலில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே மீண்டும் ஒருமுறை ப்ரெக்ஸிட் மீதான பொது வாக்கெடுப்பை ஒத்திவைத்துள்ளார்.

வருகிற மார்ச் 12-ம் தேதி மீண்டும் ப்ரெக்ஸிட் மீதான பொது வாக்கெடுப்பு நடைபெறும் என அரேபிய மாநாட்டுக்காக எகிப்து செல்லும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தெரேசா மே தெரிவித்தார்.

பிரிட்டன் ப்ரெக்ஸிட் குறித்த ஒரு தெளிவில் இருந்தாலும் பிரிட்டன் வெளியேற எப்படியும் 2021-ம் ஆண்டு ஆகிவிடும் என்றே ஐரோப்பிய யூனியன் கூறி வருகிறது.

தொடர்ந்து ப்ரெக்ஸிட் தள்ளிப்போவது தெரேசா மே மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாக சொந்தக் கட்சியினரே புகார் பத்திரம் வாசித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரேசா மே வெற்றி பெற்றதால், அவரது பதவிக்கு ஆபத்து இல்லை. ஆனாலும் தன்னுடைய பதவிக் காலத்திலேயே ப்ரெக்ஸிட்டை உறுதிப்படுத்திவிட வேண்டும் எனத் தீர்க்கமாகவே இருக்கிறார் தெரேசா மே.

மேலும் பார்க்க: கோவையைச் சேர்ந்த முருகானந்தத்தை மையப்படுத்திய படத்திற்கு ஆஸ்கர் விருது

First published:

Tags: BREXIT