வெடித்துச் சிதறிய ஹவாய் எரிமலை.. தூக்கி வீசப்பட்ட லாவா சிதறல்கள் (வீடியோ)

வெடித்துச் சிதறிய ஹவாய் எரிமலை.. தூக்கி வீசப்பட்ட லாவா சிதறல்கள் (வீடியோ)

வெடித்துச் சிதறிய ஹவாய் எரிமலை

ஹவாய் தீவின் கிலாவியா எரிமலை அண்மையில் வெடித்து சிதறியது. சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கி வீசப்பட்டன.

 • Share this:
  அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்ததில் 9 கிலோமீட்டர் சுற்றளவிற்க்கு வளிமண்டலத்தில் நீராவி மேகம் பரவியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  ஹவாய் தீவின் கிலாவியா எரிமலை அண்மையில் வெடித்து சிதறியது. சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கி வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் 4 புள்ளி 4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில் எரிமலையிலிருந்து வெளியேறிய லாவா அடிவாரத்தில் உள்ள ஒரு குளத்தில் சென்று சேர்ந்தது.

  இதனால் குளத்தில் இருந்த நீர் முழுவதும் ஆவியாகி சுமார் 9 கிலோமீட்டர் சுற்றளவுக்கு காற்று மண்டலத்தில் நீராவி மேகமாக பரவியது. இது குளிர்ந்தபின் மழையாக பொழிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

   

      

      

      

      

  மேலும், எரிமலையிலிருந்து அதிக அளவில் சாம்பல் பரவும் வாய்ப்பிருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: