குரல் தானம்...! வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய முயற்சி

குரல் தானம்...! வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய முயற்சி
(Image: Adobe Stock)
  • News18
  • Last Updated: November 25, 2019, 9:11 AM IST
  • Share this:
இங்கிலாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு குரல் தானம் செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வாய் பேச இயலாதோர் எலெக்ட்ரானிக் தொடர்பு கருவிகளின் மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொள்கிறார்கள். தாங்கள் பேச நினைப்பதை கணினியில் டைப் செய்யும்போது, கணினி குரல் ஸ்பீக்கரில் ஒலித்து மற்றவர்களுக்கு தெரிவிக்கிறது. ஆனால் இந்த கணினி குரலின் மூலம் பேசுபவர் ஆணா, பெண்ணா, இளையவரா, வயது முதிர்ந்தவரா என எதையும் உணர முடியாது.

அதனால் நேஷனல் ஸ்டார் கல்லூரி, மாடல் டாக்கர் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் குரல் தானம் செய்ய விரும்புவோர் தங்களது குரலை பதிவு செய்து விட்டு வந்தால் அந்த குரல் பொருத்தமான நபருக்கு உபயோகிக்கப்படும்.


இதன் மூலம் வாய் பேச இயலாதோர் எலெக்ட்ரானிக் கருவிகள் வழியாகப் பேசும்போது அவர்களுக்கென வழங்கப்பட்ட மனிதக்குரலே ஒலிக்கும்.
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்