Home /News /international /

ரஷ்ய அதிபர் புதினின் தோழிக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ரஷ்ய அதிபர் புதினின் தோழிக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

தோழியுடன் புதின்

தோழியுடன் புதின்

ரஷ்யாவின் தேசிய ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்பில் புதினின் தோழி கபேபா உள்ளார். இந்த குழுமம்தான் ரஷ்யாவின் பெரும்பாலான ஊடகங்களின் பங்குகளை வைத்துள்ளது.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது போர் அறிவிப்பை மேற்கொண்டு, அந்நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்த தொடங்கினார். இந்த திடீர் போரால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதன் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக பிரதிபலித்தது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நிதி, ஆயுத உதவிகளை வழங்கிவரும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு தடைகளையும் விதித்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபரின் தோழி மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.

    முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா என்பவர் அதிபர் புதினின் நீண்ட நாள் தோழியாக கருதப்படுகிறார். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இருப்பினும், 2008ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தே இருவருக்கும் இடையே உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    ரஷ்யாவின் தேசிய ஊடக குழுமத்தின் தலைமை பொறுப்பில் கபேபா தற்போது உள்ளார். இந்த குழுமம்தான் ரஷ்யாவின் பெரும்பாலான ஊடகங்களின் பங்குகளை வைத்துள்ளது. மேலும், ரஷ்ய அதிபரின் பெரும்பாலான சொத்துகள் அவரது தோழியான கபேபாவிடம் தான் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.

    இதைத் தொடர்ந்து புதினுக்கு நெருக்கடி தரும் விதமாக அவரது தோழி மீது பொருளாதர தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. இது அமலாகும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கபேபா நுழைய முடியாது. அத்துடன் அவரின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். 2014ஆம் ஆண்டில் க்ரைமியா மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு பின் அந்நாட்டைச் சேர்ந்த 1,091 பேர் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

    இதையும் படிங்க: உலகின் மிக உயரமான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...

    பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்காக ரஷ்யாவை சார்ந்துள்ள நிலையில், உக்ரைன் போர் தாக்கம் காரணமாக ரஷ்யா மீது தடை விதிக்கும் சூழலுக்கு அந்நாடுகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி