முகப்பு /செய்தி /உலகம் / விளாடிமர் புதின் அடுத்தாண்டு பதவி விலக உள்ளதாக வதந்தி - ரஷ்ய அரசு மறுப்பு

விளாடிமர் புதின் அடுத்தாண்டு பதவி விலக உள்ளதாக வதந்தி - ரஷ்ய அரசு மறுப்பு

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

விளாடிமர் புதின் அடுத்தாண்டு பதவி விலக உள்ளதாக பரவிய வதந்திக்கு ரஷ்ய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  • Last Updated :

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் அடுத்தாண்டு பதவி விலக உள்ளதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரஷ்யாவில் 2030ம் ஆண்டு வரை புதின் அதிபராக போட்டியிட அண்மையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் புதின் அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவாக காணப்பட்டார் என்று வலேரி சோலோவி என்ற அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.

top videos

    மேலும், அவர் பார்க்கின்சன் நோயால் அவதிப்படுவதாகவும், உடல்நலனில் கவனம் செலுத்த அடுத்தாண்டு அவர் பதவி விலக இருப்பதாகவும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் புதின் நலமுடன் இருப்பதாகவும், புதின் பதவி விலகுவதாக வெளியான தகவல் முட்டாள்தனமானது என்றும் அரசின் செய்தித்தொடர்பாளர் டமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Fake News, Vladimir Putin