அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை- விளாடிமிர் புடின்

'வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் செயல்கள் பல சாமானிய மக்களைப் பாதித்துள்ளது'.

Web Desk | news18
Updated: June 7, 2019, 7:58 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை- விளாடிமிர் புடின்
புடின். (Sputnik/Aleksey Nikolskyi/Kremlin via REUTERS)
Web Desk | news18
Updated: June 7, 2019, 7:58 PM IST
2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இனி வரும் எந்த நாட்டுத் தேர்தலிலும் ரஷ்யா தலையிடும் எண்ணமும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேச செய்தி ஏஜென்ஸிகளுடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த புடின், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் பங்கு குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.

புடின் கூறுகையில், “நாங்கள் எந்தத் தேர்தலிலும் தலையிடவும் இல்லை. தலையிட்டுக் கொண்டும் இல்லை. தலையிடப்போவதும் இல்லை. அமெரிக்காவின் உள்ளூர் அரசியலில் ரஷ்யா தலையிட வேண்டிய எந்த எண்ணமும் திட்டமும் எங்களிடம் இல்லை. அமெரிக்கா குறித்து ரஷ்ய குடிமக்கள் பேசினால் அது அவர்களின் சுய கருத்துரிமை. அதற்கு என்ன தடை விதிக்கமுடியும்?

அமெரிக்காவுக்கு நாங்கள் எந்தப் படையையும் அனுப்பவில்லை. அனுப்பப்போவதும் இல்லை. வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் செயல்கள் பல சாமானிய மக்களைப் பாதித்துள்ளது” எனப் பேசினார்.

மேலும் பார்க்க: ’தேர்தலில் ஜெயிக்க ரஷ்யா உதவியது’- அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சை மாற்றிய ட்ரம்ப்!
First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...