• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் விளாதிமிர் புடின் கட்சி மீண்டும் வெற்றி

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் விளாதிமிர் புடின் கட்சி மீண்டும் வெற்றி

விளாதிமிர் புடின்

விளாதிமிர் புடின்

450 இடங்களைக் கொண்ட ரஷ்ய நாடாளுமன்றத்திற்கு மூன்று நாட்கள் தேர்தல் நடைபெற்றது.

  • Share this:
    ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புடின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 இடங்களைக் கொண்ட ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு மூன்று நாட்கள் தேர்தல் நடந்தது. அதிபர் புடினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கையில் அதிபர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 49 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் நாடாளுமன்றத்திற்கு கடந்த 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருதப்பட்டது. அத்துடன், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிபர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி முன்னிலையில் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் அதிபர் புடினின் கட்சி அமோக வெற்றி பெற்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருப்பதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Must Read : வீடுகளுக்குள் புகுந்த எரிமலைக் குழம்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

    மொத்தமுள்ள 450 இடங்களில் 350க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: