Home /News /international /

உக்ரைன் குறித்து ரஷ்ய அதிபர் தப்பு கணக்கு போட்டுவிட்டார்: ஜோ பைடன்

உக்ரைன் குறித்து ரஷ்ய அதிபர் தப்பு கணக்கு போட்டுவிட்டார்: ஜோ பைடன்

ஜோ பைடன்

ஜோ பைடன்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், நேட்டோவும் உதவாது என புதின் தவறாக நினைத்து விட்டதாக குறிப்பிட்ட பைடன், அந்நாட்டு மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

    உக்ரைன் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தப்பு கணக்கு போட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். புதின் எதிர்பார்க்காத ஒற்றுமையை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஸ்டேன் ஆஃப் யூனியன் கூட்டத்தில் அதிபர் பைடன் முதல் முறையாக உரையாற்றினார். உள்நாட்டு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசப்படும் இக்கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு குறித்து பைடன் உரை நிகழ்த்தினார்.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தூண்டப்படாத மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என விமர்சித்தார். போரின் எதிரொலியாக, அமெரிக்க வான் பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார். உக்ரைனுக்கு ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    உக்ரைன் - ரஷ்யா போர்: கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு

    உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என புதின் தப்பு கணக்கு போட்டு விட்டதாகவும், ஆனால் உக்ரைன் மக்கள் தீரத்துடன் போராடி வருவதாகவும் பைடன் பாராட்டினார்.

    உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், நேட்டோவும் உதவாது என புதின் தவறாக நினைத்து விட்டதாக குறிப்பிட்ட பைடன், அந்நாட்டு மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார். உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா பீரங்கிகளை நிறுத்தினாலும், மக்களின் மனதை வெல்ல முடியாது என்றும் கூறினார். ஆனால் உக்ரைனில் ரஷ்ய படைகளை எதிர்த்து அமெரிக்க படைகள் நேரிடியாக போரிடாது என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

    பைடனின் உரையின் போது, உணர்ச்சிவசப்பட்ட உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா-வை பைடனின் மனைவி பில் பைடன் கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார்

    அதிபரின் உரையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை எழுந்து நின்று தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். பல உறுப்பினர்கள் உக்ரைன் கொடிகளையும் ஏந்தியவாறு நிகழ்வில் பங்கேற்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Joe biden, Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி