அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அடுத்தாண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேட்பாளராக களமிறங்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். தனக்கு எதிராக போட்டி ஏதும் வரக்கூடாது என்ற நோக்கில் அவர் ஒருபுறம் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி என்பவர் குடியரசு கட்சி சார்பில் அவருக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார். 37 வயதான விவேக் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியை பூர்வீகமாக கொண்டவர்.
இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கு தந்தை மின் பொறியாளராகவும், தாய் மனநல மருத்துவராகவும் பணியாற்றினர். அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் பிறந்த அவர் ஹார்வர்டு, யேல் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றார்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் முன்னணி தொழிலதிபராக இருக்கும் விவேக்கின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தலில் டொனல்டு ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகியோரை எதிர்த்து விவேக் போட்டியிடவுள்ளார். குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெற்று அவர்கள் ஜனநாயக கட்சி வெற்றி வேட்பாளரை எதிர்த்து களம் காண்பார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: President Election, US President