ரஷ்யாவை சேர்ந்த லிட்வின் என்பவர் யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். யூடியூபில் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் Mercedes-AMG GT 63 S சொகுசு காரை வாங்கியுள்ளார்.
காரை வாங்கிய நாள்முதல் அடிக்கடி வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. காரை சரி செய்ய லிட்வின் பல முறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து டீலர்களிடம் 5 முறை காரை அனுப்பியும், அவர்கள் சரி வர வேலை செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த லிட்வின், சமவெளியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது யூ ட்யூப் பக்கத்தில் பதிவிட்ட லிட்வின், தான் சந்தோஷமாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.