Home /News /international /

பொதுமக்களை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் சீனா! வைரலாகும் வீடியோ

பொதுமக்களை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் சீனா! வைரலாகும் வீடியோ

பொதுமக்களை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் சீனா!

பொதுமக்களை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் சீனா!

China | ஷாங்காய் பகுதியில் லாக்டவுனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தென்படவில்லை. இதனால், சீன மக்கள் கொரோனாவை காட்டிலும் லாக்டவுனை கண்டு கடும் அச்சமடைந்துள்ளனர். 

    சீனாவில் உள்ள மக்கள் கொரோனா வைரஸை காட்டிலும் லாக்டவுனை கண்டு தான் அதிக பீதியடைந்துள்ளனர். அதற்கு ஷாங்காய் மற்றும் பல இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் முக்கிய காரணமாக உள்ளன.

    அந்த வீடியோக்களில் அப்பகுதி மக்கள் துன்புறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அதுபோன்று எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மறுத்து தரையில் படுத்திருக்கும் பெண் ஒருவர் மீது அமர்ந்து, சோதனை செய்யும் நபர் வலுக்கட்டாயமாக அவரது கால், கைகளை பிடித்து வைத்துக்கொண்டு, அவரது வாயை திறந்து வைக்கிறார். அப்போது, உடன் இருக்கும் மற்றொரு சுகாதார ஊழியர் அந்த பெண்ணுக்கு பரிசோதனை மேற்கொள்கிறார். இந்த வீடியோ அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், இதைத்தொடர்ந்து, இன்னும் சில வீடியோக்கள் வைரலாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க | பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ‘தவறான’ ஆட்சி ‘ஒரு ஆய்வு கட்டுரை’: ராகுல் காட்டம்

    இதேபோன்று வைரலாகும் மற்றொரு வீடியோவில் சீன சுகாதார ஊழியர்கள் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது கை, கால்களை அழுத்தி பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.



    மேற்கொண்ட வீடியோ சீனாவில் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, எனினும் அங்கு ஷாங்காய் பகுதியில் தீவிரமான ஊரடங்கு ஒரு மாதத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன தலைநகரம் பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், 158 பேருந்து வழித்தடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அங்கு மொத்தமுள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் வாரத்தில் 3வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதனிடையே, ஷாங்காய் பகுதியில் லாக்டவுனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தென்படவில்லை. இதனால், சீன மக்கள் கொரோனாவை காட்டிலும் லாக்டவுனை கண்டு கடும் அச்சமடைந்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: China, Corona, Covid-19

    அடுத்த செய்தி