ஹோம் /நியூஸ் /உலகம் /

குட்டி தேவதைகள் வாழ்த்துபாடி நடந்த திருமணம்..நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்கிய மணப்பெண்..! வைரல் வீடியோ

குட்டி தேவதைகள் வாழ்த்துபாடி நடந்த திருமணம்..நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்கிய மணப்பெண்..! வைரல் வீடியோ

வைரலாகும் திருமண வீடியோ

வைரலாகும் திருமண வீடியோ

கடந்த சில நாள்களாக இணையத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமான திருமண வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaRomeRomeRomeRome

  திருமணம் என்பது அனைவரின் வாழ்நாளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். அந்த நாளை மறக்க முடியாத விதமாக மாற்ற விதவிதமான செயல்களை சர்ப்ரைசாக செய்து அது வைரலாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

  பொதுவாக ஏதாவது பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்வுகளை செய்வது, கேளிக்கைகளை நிகழ்த்துவது போன்றவையே இதுபோன்ற திருமண வைரல் வீடியோக்களில் அதிகம் காணப்படுகிறது. ஆனால், கடந்த சில நாள்களாக இணையத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமான திருமண வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் மணப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக நெகிழ்ச்சியான செயல் ஒன்ற மணமகன் நடத்தியுள்ளார்.

  இந்த சம்பவம் ஒரு ஐரோப்பிய நாட்டில் நடப்பது போல தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகளும் மணமகனும் கவுன் மற்றும் கோட் உடைகளை அணிந்து தேவாலயத்தில் தங்கள் திருமண சடங்கிற்காக பாதிரியார் முன் நிற்கிறார்கள். அப்போது திடீரென்று தேவாலயத்திற்குள் சூப்பரான உடைகளை உடுத்திக்கொண்டு சில குட்டிஸ் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் கையில் பூங்கொத்து, திருமண மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உள்ள மணமக்களை நோக்கி நடந்து வருகிறார்கள். அதில் இரு குட்டீஸ் குட்டி ரிமோட் கார் ஒன்றில் நின்றுகொண்டு தேவாலயத்திற்குள் க்யூட்டாக வருகிறார்கள். அதை பார்த்ததும் மணப்பெண்ணுக்கு மகிழ்ச்சி தாங்க முடியாமல் கண்களில் நீர் ததும்ப மணமகனை அனைத்துக் கொள்கிறார்.

  அந்த குட்டி சிறுவர்கள் அனைவரும் 'down syndrome' என்ற அரிய வகை க்ரோமோசோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களை பராமரிக்கும் பள்ளியில் தான் அந்த மணப்பெண் பணியாற்றி வருகிறார். அந்த மணப்பெண்ணுக்கு மறக்க முடியாத திருமண நாள் அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கில், ரகசிய யோசனையுடன் அவர் அன்புடன் பராமரிக்கும் குழந்தைகளை திருமண நாள் ஹீரோக்களாக மாற்றியுள்ளார் மணமகன்.

  இதையும் படிங்க: சுரங்கத்தில் கிடைத்த 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேன்ட்.. ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போனது!

  குழந்தைகள் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து, திருமண மோதிரம் தரும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.'The Figen' என்ற ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை இதுவரை 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Marriage, Viral News, Viral Video