முகப்பு /செய்தி /உலகம் / மறைந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ

மறைந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ

தனது திருமணத்தில் தாய் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், அவரை மறக்காமல் செயல்பட்ட மணப்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தனது திருமணத்தில் தாய் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், அவரை மறக்காமல் செயல்பட்ட மணப்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தனது திருமணத்தில் தாய் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், அவரை மறக்காமல் செயல்பட்ட மணப்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மணப்பெண் ஒருவர் தனது மறைந்த தாயின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு, திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். தந்தையுடன், தாய் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, மணமேடைக்கு அவர் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது திருமணத்தில் தாய் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், அவரது புகைப்படமாவது இடம்பெறட்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட மணப்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்தை பிரபல புகைப்பட கலைஞர் மகா வஜாகத் கான் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அந்த மணப்பெண்ணின் தாயார் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு, இன்னொரு கையில் தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு மணமேடைக்கு மணப்பெண் வருகிறார்.

57 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. கமென்ட்டுகளில் ஹார்ட்டின்களை விட்டுள்ள நெட்டிசன்கள், 'இந்த வீடியோவை பார்க்கும் போதெல்லாம் அழுகை வருகிறது. தாய் என்பது இறைவன் கொடுத்த மிகச்சிறந்த வரம். இந்த வீடியோவை பார்க்கும்போது என் தாயை நினைத்துப் பார்க்கிறேன்.

பெண்களுக்கு இதுபோன்ற நிகழ்வு எல்லாம் துயரமான தருணம். என் தாய் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை' என்று உருகியுள்ளனர்.

வீடியோவை பார்க்க...


இந்த வீடியோ தற்போது 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்

இதையும் படிங்க : பிரதமர் மோடி முதல் தீபிகா படுகோன் வரை... ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட இந்தியர்களின் பட்டியல்

இதையும் படிங்க : உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து வந்த விமானப் பயணி... பணியாளருடன் கடும் வாக்குவாதம்

First published:

Tags: Viral