Home /News /international /

5ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. சூப்பர் ஹீரோ போல கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்... வைரல் வீடியோ

5ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. சூப்பர் ஹீரோ போல கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்... வைரல் வீடியோ

5ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை பிடித்து காப்பற்றிய நபர்

5ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை பிடித்து காப்பற்றிய நபர்

குழந்தை விழும் சத்தம் எதர்த்தமாக கேட்கவே, சமயோசிதமாக அருகே ஒடிச் சென்று மாடியிலிருந்து விழுந்த குழந்தையை சரியாக கேட்ச் பிடித்து காப்பாற்றியுள்ளார்.

    ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தையை யதார்த்தமாக கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர் ஹீரோவாக வலம் வருகிறார். சீனாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், சிசிடிவில் பதிவான இந்த காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவின் சிஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு இரண்டு வயது பெண் குழந்தை ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளது. அங்கு 31 வயதான ,ஷென் டாங்க் என்ற நபர் தனது காரை பார்க்கிங் செய்து விட்டு காரை விட்டு வெளியே வந்துள்ளார். அவருக்கு குழந்தை விழும் சத்தம் எதர்த்தமாக கேட்கவே, சமயோசிதமாக அருகே ஒடிச் சென்று மாடியிலிருந்து விழுந்த குழந்தையை சரியாக கேட்ச் பிடித்து காப்பாற்றியுள்ளார். உடனடியாக அவர் குழந்தையை அருகே உள்ள மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார். இவர் கேட்ச் பிடிக்கும் இந்த காணொலி சிசிடிவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    சீனா நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியான் சஹாவோ ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து இவர் நம்மிடம் இருக்கும் ஒரு ஹீரோ என பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வீடியோவுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும் கமென்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதையும் படிங்க: ரயில் பயணம் இலவசம்... ஸ்பெயின் அரசின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன.? 

    தனது சமயோசித செயல்பாடு குறித்து ஷென் டாங் கூறுகையில், தான் காரை நிறுத்தி விட்டு அருகே வந்த போது அந்த குழந்தை ஐந்தாவது மாடியில் இருந்து விழும் சத்தம் கேட்டது. ஐந்தாவது மாடியில் இருந்து முதல் தளத்தில் உள்ள கூரையில் பத்திரமாக விழுந்தது. அங்கிருந்து குழந்தை கீழே உருண்டு விழும் என கணித்த நான் அதை கவனித்து கையில் ஏந்தி பிடித்துக்கொண்டேன் என்றார். முதல் மாடி கூரையில் அது விழும் போது குழந்தைக்கு பெரிய அடியோ பாதிப்போ ஏற்படாதது பெரும் அதிர்ஷ்டம் என அவர் கூறியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: China, Video gets viral, Viral Video

    அடுத்த செய்தி