கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் முழுவதும் மீண்டு வரும் நிலையில், விஞ்ஞானிகள் அடுத்த தொற்றுநோய் வெளவால்கள் அல்லது பறவைகளிடமிருந்து வராமல் , பனிப்பாறைகள் உருகுவதால் நிகழும் என்கின்றனர்.
உலகெங்கிலும் காலநிலை மாற்றம் காரணமாக துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அப்படி உருகிய பின்னர் அதன் அடியில் இருக்கும் மண்ணின் மரபணு பகுப்பாய்வு வைரஸ் கசிவு மற்றும் வைரஸ்கள் பரவல் அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
வைரஸ் ஸ்பீல்ஓவர்:
வைரல் ஸ்பில்ஓவர் என்பது ஒரு புதிய ஹோஸ்டை எதிர்கொள்ளும் போது, ஒரு வைரஸ் அதைத் தாக்கி, இந்தப் புதிய ஹோஸ்டில் நிலையாகப் பரவும் ஒரு செயல்முறையாகும்.
இங்கிலாந்தின் பிரதமராகப்போகும் ரிஷி சுனக்.. மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Proceedings of the Royal Society B: Biological Sciences இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் , காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை வேகமாகப் பாதித்து வரும் நிலையில் கிருமிகள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.
பனிப்பாறைகளில் அடைபட்டிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நிரந்தரமாக உறைய வைக்கும் சூழல் மாறுவதால் அது மீண்டும் உயிர்பெற்று பரவும். வைரஸ்கள் அது வளரும் சூழ்நிலை கிடைக்கும் வரை வெறும் கல்லையும் மண்ணையும் போல் இருக்கும். சூழல் கிடைத்துவிட்டால் சட்டென்று உயிர்பெற்றது போல் பரவத்தொடங்கும்.
இதனால் பனிப்பாறைகள் உருகுவது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இது நேரடியாகவோ விலங்குகள் மூலமாகவோ பெரும் தோற்று வாய்ப்பை ஏற்படுத்தும்.
இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமா... லடாக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு
ஒரு குழு உலகின் மிகப்பெரிய உயர் ஆர்க்டிக் நன்னீர் ஏரியான லேக் ஹசென் ஏரியிலிருந்து மண் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்து, ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏவை வரிசைப்படுத்தியது. அதில் வைரஸ்களின் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
விஞ்ஞானிகள், 2021 இல் பனிப்பாறைகளைப் சோதிக்கும்போது, 15,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த 33 வைரஸ்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் 28 அறியப்படாத புதிய வகை வைரஸ்கள். இதேபோல், புவி வெப்பமடைதல் காரணமாக உருகும் திபெத்திய பனிப்பாறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GLACIER MELTING, Global warming, Pandemic