ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கையில் வன்முறை - ஆளுங்கட்சி எம்.பி அடித்துக்கொலை

இலங்கையில் வன்முறை - ஆளுங்கட்சி எம்.பி அடித்துக்கொலை

நன்றி - AFP

நன்றி - AFP

Srilanka Crisis: இலங்கையின் ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இலங்கை அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் கொழும்பு தற்போது போர்க்களமாக காட்சியளிக்கிறது. அரசுக்கு எதிராக இரு மாதங்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை கொழும்புவில் மகிந்தாவின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு மீது தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. இதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகணடப்படுத்தப்பட்டது. சில மணிநேரங்களிலேயே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்தா அறிவித்தார்.

  மகிந்தா ராஜினாமாவை அறிவித்த நிலையிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாததால் கொழும்புவில் வன்முறை சம்பவங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதுவரை மட்டும் கொழும்புவில் நடைபெற்ற வன்முறையில் 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் காரை மக்கள் குளத்தில் மூழ்கடித்துள்ளனர்.

  ஆளும் கட்சி எம்.பி உயிரிழப்பு:

  போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், விடுமுறையில் உள்ள காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி என்பவரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். அவர்கள் மீது எம்பி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் எம்பி அமரகீர்த்தி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ் பெண்

  மேயர் வீட்டுக்கு தீ வைப்பு:

  மேலும், மோராட்டுவா பகுதி மேயர் சமன் லால் பெர்னாட்டோ என்பரின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதாக காவல்துறை கூறியுள்ளது. இவர் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு ஆதரவாளர்களை திரட்டிய ஆத்திரத்தில் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  இலங்கையில் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுவதாகவும். ரயில்கள் இயக்கப்படாது எனவும் அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அத்துடன் அரசுக்கு ஆதரவாக நபர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். போராட்டம் கலவரமான நிலையில் இலங்கையின் பல்வேறு பகுதிகள் போர்களமாக காட்சியளிக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பொருளாதார உதவி செய்துவரும் நிலையில், இந்தியாவும் இலங்கையில் ஏற்படும் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Sri Lanka, Sri Lanka political crisis