• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • வினிஷா உமாசங்கர்: உலக தலைவர்களுக்கு பாடம் எடுத்த தமிழக சிறுமி!

வினிஷா உமாசங்கர்: உலக தலைவர்களுக்கு பாடம் எடுத்த தமிழக சிறுமி!

வினிஷா உமாசங்கர்

வினிஷா உமாசங்கர்

OP26 climate summit நிகழ்வில் பேசிய வினிஷா உமாசங்கர்(Vinisha Umashankar) தனது தலைமுறையில் பலர் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர் என தெரிவித்ததோடு தான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல பூமியைச் சேர்ந்த பெண்ணும்தான் என்று கூறினார்.  

 • Share this:
  பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும்  COP26 climate summit நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி வினிஷா உமாசங்கரின் உரை அனைவரையும் கவர்ந்து.

  தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர்(Vinisha Umashankar) .  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்   தொடங்கிய Earthshot Prize விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.

  இந்நிலையில், பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும்  COP26 climate summit நிகழ்வில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து  பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் மாநாட்டில் பேசிய வினிஷா, இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள்.

  புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான  எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.  பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க: புனித் ராஜ்குமார் மரணம்: இதய பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு!


  மேலும், “எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, ​​நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

  இளவரசர் வில்லியம் உடன்


  எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது.

  நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான்.  நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார்.  அவரது பேச்சு அங்கிருந்த உலக தலைவர்கள் பலரையும் ஈர்த்தது.

  இதையும் படிங்க: ரூ.20 கோடி மதிப்புள்ள வைரக் கல்லை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்த பெண் - காரணம் என்ன?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: