அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற வெள்ளை மாளிகை
முற்றுகை போராட்டத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வல்லரசு நாட்டின் அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 5 பேர்
கொல்லப்பட்டனர். உலக தலைவர்கள் அனைவரும் இதற்கு
கண்டனம் தெரிவித்திருந்தனர்.
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக
கூறப்படும் இந்த முற்றுகை போராட்டத்தில் இந்திய தேசிய
கொடியை கையில் ஒருவர் ஏந்தியபடி இருந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பாஜக எம்.பி வருண் காந்தி உள்ளிட்ட
பலரும் விமர்சித்து வந்தனர்.
இதனிடையே அப்போராட்டத்தின் போது இந்திய கொடியை
ஏந்தியியிருந்தவர் யார் என்பது குறித்து தற்போது
தெரியவந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த வின்செண்ட் சேவியர் என்ற 54 வயதுடைய
நபர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவின்
கொச்சியை சேர்ந்த வின்செண்ட் தற்போது விர்ஜினியாவில்
வசித்து வருகிறார்.
ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான வின்செண்டிடம் விசாரித்த
போது, தேர்தல் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வந்த
அமைதிப் போராட்டத்தில் சுமார் 50 கலவரக்காரர்கள்
ஊடுருவியதாகவும் அவர்கள் ராணுவ பயிற்சி
மேற்கொண்டவர்கள் போல சுவற்றில் ஏறியதாகவும் கூறினார்.
அந்த கும்பலே இந்த வன்முறைக்கு காரணம் என்றும் கூறினார்.
இந்திய கொடியை ஏந்தியது ஏன்?
இருப்பினும் இந்த போராட்டத்தில் இந்திய கொடியை எதற்காக
ஏந்தியிருந்தீர்கள் என கேட்ட போது, ட்ரம்பின் ஆதரவாளர்கள்
இனவெறியர்கள் கிடையாது என்பதை காட்டவே தான் இந்திய
கொடியை ஏந்தியதாக கூறினார். அது இனவெறி போராட்டமாக
இருந்திருந்தால் என்னால் நம் நாட்டு கொடியை ஏந்த முடியாது
என குறிப்பிட்டார்.
மேலும் மேற்கண்ட போராட்டத்தின் போது 10 இந்தியர்கள் அங்கு
இருந்ததாகவும் அதில் 5 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனவும்
வின்செண்ட் கூறினார். ட்ரம்பின் பேரணி எங்கு நடந்தாலும்
அங்கு வியட்நாம், கொரியா, பாகிஸ்தான் நாடுகளை
சேர்ந்தவர்கள் பங்கேற்பதை காண முடியும், அது இனவெறி
போராட்டம் அல்ல’ என வின்செண்ட் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.