இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களுக்கு வழக்கு செலவுகளுக்காக பணம் செலுத்துவதற்கு 7.8 கோடி ரூபாய் வழங்கக்கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துவதற்கான சட்ட வழிமுறைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ளார்.
ALSO READ | நவம்பர் 2019-லேயே வூகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்களுக்கு கொரோனா தொற்று?- அமெரிக்க ஊடகம் பரபரப்பு
அதில், பல்வேறு வழக்குக்கள் நிலுவையில் இருப்பதால் அதனை மேற்கொண்டு நடத்துவதற்கான வழக்கு செலவீனங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொடுப்பதற்காக லண்டனில் உள்ள கோர்ட் பன்ட் ஆபிஸில் இருந்து 7.8 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த தொகையை இந்தியாவில் உள்ள தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், மற்ற வழக்கு நடைமுறைகளுக்கும் பயன்படுத்த வேண்டியிருப்பதாக கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஐசிசி நீதிபதி பார்னெட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
ALSO READ | அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் நெ.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்... யார் இவர்?
மல்லையாவின் வங்கி முறைகேடு தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி பார்னெட், வங்கி முறைகேடு தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கை நடத்துவதற்கும், மாத செலவினங்களுக்கும் லண்டன் கோர்ட் ஆப் பன்ட்டில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார். இதில், இந்தியாவில் நடைபெறும் வழக்கு தொடர்பான செலவினங்கள் சேர்க்கப்படவில்லை. அதனை சுட்டிக்காட்டியுள்ள விஜய் மல்லையா, அந்த வழக்குகளுக்கு செலவிடப்படும் தொகை மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகைகளுக்காக நிதியை விடுவிக்க வேண்டும் என புதிய மனுவில் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் பிலிப் மார்ஷல் பேசும்போது, இந்தியாவில் நடைபெறும் வழக்குகளில் விஜய் மல்லையா நேரடியாக பங்குபெறமுடியாத சூழல் இருப்பதாக கூறியுள்ளார். மோசடி செய்த பணத்தை திரும்ப செலுத்தக்கோரும் செட்டில்மென்ட் வழக்கு, வங்கிகள் விதித்துள்ள 11.5 விழுக்காடு கூட்டு வட்டி வழக்கு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி ஆகிய மூன்று விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நடைபெறுவதாகவும், இந்த வழக்குகளை அவர் தனித்தனியாக எதிர்கொண்டு வருவதாகவும் பிலிப் மார்ஷல் கூறியுள்ளார்.
ALSO READ | டயானா மரண சர்ச்சை: மன்னிப்பு கோரினார் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர்
மல்லையாவின் கூட்டு வட்டி தொடர்பான வழக்கு வெற்றி பெற்றுவிட்டால் மோசடியாக கூறப்படும் கடன் தொகையானது 5,851 கோடி ரூபாயாக குறையும் என்றும், அதனை நிலுவையில் இருக்கும் சொத்துகளின் மூலம் திருப்பிச் செலுத்திவிடுவார் என்றும் வழக்கறிஞர் மார்ஷல் விளக்கமளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் முறையாக நடைபெறுவதற்கு போதுமான நிதி தேவைப்படுவதாக கூறியுள்ள விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் மார்ஷல், அதற்காக தற்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: London, Vijay Mallya