Home /News /international /

வியட்நாம் அதிபர் காலமானார்

வியட்நாம் அதிபர் காலமானார்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் (61) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டிரான் டாய் குவாங் ஹனோவிலுள்ள ராணுவ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுருந்தார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உள்நாட்டு மருத்துவர்கள் , சர்வதேச மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் என அனைவரும், குணமடைய சிகிச்சை அளித்தும் இன்று காலை 10 மணியளவில்  உயிர் பிரிந்தது.

    இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவரை சந்தித்த வியாட்நாம் அதிபர்


    61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த காலகட்டத்தில் இவர் மிக சிறந்த ஒரு அதிபர் என்று அனைவராலும் புகழப்பட்டார்.

    குவாங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்கள்குவாங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tran Dai Quang, Vietnam

    அடுத்த செய்தி