இந்தோ-பசிபிக் திட்டம்: இந்தியாவின் முக்கிய நட்புநாடு வியட்நாம்- நரேந்திர மோடி

இந்தோ-பசிபிக் திட்டம்: இந்தியாவின் முக்கிய நட்புநாடு வியட்நாம்- நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் கிழக்கு கொள்கையின் முக்கிய தூண் வியட்நாம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி

 • Share this:
  காணொலி காட்சி வாயிலாக இந்தியா-வியட்நாம் இடையிலான உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும், வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் புக்கும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

  அப்போது, சர்வதேச விவகாரங்கள் மற்றும் இருதரப்பு பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. அத்துடன், கொரோனா தொற்றை எதிர்கொள்வது, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதாரநிலை போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

  பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் “இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய கூட்டாளியாக வியட்நாம் திகழ்வதாகக் கூறினார். ‘இந்தியாவின் கிழக்கு கொள்கையின் முக்கிய தூண் வியட்நாம்’ என்றும் புகழாரம் சூட்டினார்.

  மேலும், வியட்நாமுடனான உறவுகளை நீண்டகால கண்ணோட்டத்துடன் இந்தியா பார்க்கிறது என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நமது பொதுவான நோக்கம் என்றும் கூறினார். அத்துடன், பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையும் பேணுவதில் நமது ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்காற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: