• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • திடீரென வீசிய சக்தி வாய்ந்த காற்று... தூக்கி வீசப்பட்ட டிரக்... சீனாவில் அரங்கேறிய வினோத காட்சி

திடீரென வீசிய சக்தி வாய்ந்த காற்று... தூக்கி வீசப்பட்ட டிரக்... சீனாவில் அரங்கேறிய வினோத காட்சி

சிசிடிவியில் பதிவான காட்சி

சிசிடிவியில் பதிவான காட்சி

சக்தி வாய்ந்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட டிராக் 1.8 டன் எடை கொண்டது. நல்வாய்ப்பாக டிரைவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் லேசான காயங்கள் உடன் தப்பித்தார்.

  • Share this:
    கண்காணிப்பு கேமிராவில் பதிவான ஒரு வினோதமான வீடியோவில் தீடிரென வீசிய சக்தி வாய்ந்த காற்றால் டிரக் ஒன்று தூக்கி வீசப்படுகிறது.

    சீனாவின் யின்சுவான் மாகணத்தில் சிக்னலில் வாகனங்கள் காத்து கொண்டிருந்தன. அப்போது வீசிய சக்தி வாய்ந்த காற்றால் டிரக் தரையிலிருந்து தூக்கி வீசப்பட்டு அங்கே சுழன்று விழுகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

    சக்தி வாய்ந்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட டிராக் 1.8 டன் எடை கொண்டது. நல்வாய்ப்பாக டிரைவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் லேசான காயங்கள் உடன் தப்பித்தார். அந்த டிரக்கின் பின்புறம் கார்களும் சிக்கனலுக்காக காத்திருந்தன.

    இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த டிரக்கின் பின்புறம் இருந்த கார்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை குழப்பமடைய செய்துள்ளது.



    இந்த விபத்து ஏற்பட்டது எப்படி என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சக்தி வாய்ந்த காற்று அல்லது சூறாவளியாக இருந்தால் அங்கிருந்த அனைத்து வண்டிகளுக்கும் சேதமாகி இருக்கும். ஆனால் டிரக் மட்டும் எப்படி தூக்கி வீசப்பட்டது என்று பலர் குழப்பத்தில் ஆழந்துள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: