ப்ளாஸ்டிக் கவரில் கொண்டு செல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல்! வைரலாகும் வீடியோ

அமெரிக்க சிஐஏ என்னும் உளவுப்பிரிவும் துருக்கி அரசும் கஷோகி மரணத்துக்கு சவுதி இளவரசர் தான் காரணம் என ஆதாரத்துடன் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: January 1, 2019, 1:54 PM IST
ப்ளாஸ்டிக் கவரில் கொண்டு செல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல்! வைரலாகும் வீடியோ
பத்திரிகையாளர் கஷோகி (Photo: AP)
Web Desk | news18
Updated: January 1, 2019, 1:54 PM IST
துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையாளரின் உடல் கொலையாளிகளால் ப்ளாஸ்டிக் கவரில் அப்புறப்படுத்தப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் கஷோகி. இவர் சவுதிக்கான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தார். கஷோகி தொடர்ந்து சவுதி இளவரசருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்ததால் சவுதி இளவரசர் உடன் நேரடியாகவே மோதல் போக்கு காணப்பட்டது.

இந்நிலையில், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குத் தனது திருமணம் தொடர்பாக சில சான்றிதழ்கள் பெற சென்றார். தனது காதலியை வாயிலில் நிற்க வைத்துவிட்டு தூதரகத்துக்குள் சென்ற கஷோகி அடுத்துத் திரும்பவே இல்லை. அதன் பின்னர் கஷோகி கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அரசு ஆதாரத்துடன் பல தகவல்களை வெளியிட்டு சவுதி இளவரசருக்குக் கண்டனமும் தெரிவித்தது.முதலில் சவுதி தூதரகத்துக்குள் கொலையாளிகள் பேசும் ஆடியோவும் கஷோகியின் இறுதி நிமிட புலம்பல்களும் பதிவான ஆடியோவும் வெளியிடப்பட்டது. தற்போது கொலையாளிகள் படுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடலை ஒரு சிறு ப்ளாஸ்டிக் கவரில் அப்புறப்படுத்தும் காட்சியை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சவுதி இளவரசரை நேரடியாகவே துருக்கி அரசு தாக்கி வருகிறது.

ஆனால், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார் இளவரசர் முகமது பின் சல்மான். ஆனால், அமெரிக்க சிஐஏ உளவுப்பிரிவு உறுதியாக கஷோகியின் மரணத்துக்கு சவுதி இளவரசர் தான் காரணம் என உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் பார்க்க: களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
Loading...
First published: January 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...