Home /News /international /

இலங்கையில் போற்றப்படும் சமய நல்லிணக்கம்.. ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு ரசித்த கண்டி நடனம்.. | வீடியோ

இலங்கையில் போற்றப்படும் சமய நல்லிணக்கம்.. ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு ரசித்த கண்டி நடனம்.. | வீடியோ

பெரஹரா நடனம்.

பெரஹரா நடனம்.

கண்டியை ஆண்ட நாயக்கா அரச குடும்பத்தினர் மதுரை ராஜ குடும்பத்திலிருந்து பெண் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் கண்டி தலதா மாளிகை திருவிழாவையொட்டி, கண்கவர் ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு இசை கருவிகள் முழங்க. ஆண்களும், பெண்களும் நடனமாட30க்கும் அதிகமான யானைகள் ஊர்வலமாக வர,இலங்கையின் கண்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த பெரஹரா திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடந்துவருகிறது. பெளத்த மதத்தின் புனித இடமாக கருதப்படும் தலதா மாளிகை வாசலில் இருந்து கிளம்பிய ஊர்வலம் ராஜ வீதி வழியாக சென்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கண்டுகளித்த இந்த திருவிழாவிற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



தமிழகத்தில் நடைபெறும் தேர் திருவிழாவை போல், பெளத்த மதத்தில் ஆடி மாதத்தில் பெரஹரா திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் இலங்கையில் அனுசரிக்கப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நல்ல மழை பெய்ய வேண்டும் என இயற்கையை வணங்குதலும் விழாவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இன்னோரு பக்கம், புத்தரின் பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, பதிவு செய்யப்பட்ட தினத்தைக் கொண்டாவும் விதமாகவும் இத்திருவிழா பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இதையும் பாருங்க: இலங்கையில் இந்து மதக்கோவில்களுக்கு பெருமளவில் செல்லும் சிங்களவர்கள்!

சமய நல்லிணக்கத்தை போற்றும் வகையில், முருகன் கோவில்களில் ஆடப்படும் காவடியாட்டமும் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. இசை வாத்திய கருவிகள், நடனக்குழு, அலங்கரிக்கப்பட்ட யானை என 50க்கும் அதிகமான குழுவினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற அரச குடும்பத்தின் வாரிசுகள் மக்களின் வரவை ஏற்றுக்கொண்ட காட்சியையும் காண முடிந்தது. கண்டிக்கும் மதுரைக்கும் நெருங்கிய வரலாற்று தொடர்பு உள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

கண்டியை ஆண்ட நாயக்கா அரச குடும்பத்தினர் மதுரை ராஜ குடும்பத்திலிருந்து பெண் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதேபோல், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கண்டியை காப்பாற்றும் போர் பணிக்கு மதுரையிலிருந்து வீரர்கள் சென்றுள்ளனர்.

மதுரை வீரர்களின் வீரம் அக்காலத்தில் போர்ச்சுகீசிய தளபதிகளால் பாராட்டப்பட்டது என்கிறது வரலாற்று குறிப்பு.

- மகாலிங்கம் பொன்னுசாமி, உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர், நியூஸ் 18 தமிழ்நாடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Saravana Siddharth
First published:

Tags: Dance, Festival, Srilanka

அடுத்த செய்தி