Home /News /international /

மன்னர் சார்லெஸ் காரில் மோத சென்ற நபர்... வைரலாகும் பரபரப்பு காட்சிகள்

மன்னர் சார்லெஸ் காரில் மோத சென்ற நபர்... வைரலாகும் பரபரப்பு காட்சிகள்

மன்னர் சார்லெஸ் காரில் மோத சென்ற நபர்

மன்னர் சார்லெஸ் காரில் மோத சென்ற நபர்

பிரிட்டன் மன்னர் சார்லெஸ் காரின் மீது ரோலர் ஸ்கேடிங்கில் வந்த நபர் மோத சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon
    பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் தற்போது புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார். 70 ஆண்டு காலம் பிரிட்டனை ஆண்ட எலிசபெத் ராணி செப்டம்பர் 8ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் உயிரிழந்துள்ளார்.

    ராணியின் மறைவை தொடர்ந்து அவரின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். பிரிட்டன் அரச குடும்பத்தில் இந்த நடைமுறை மாற்றங்கள் நிகழ்ந்துவரும் சூழலில், ராணியின் உடல் நல்லடக்க ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், உலக தலைவர்கள் லண்டன் நோக்கி படையெடுத்துள்ளனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் லண்டன் வருகை தந்துள்ளனர். ராணியின் சவப்பெட்டி பிரிட்டன் நாடாளுமன்றமான வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் மற்றும் மறைந்த ராணியின் சவப்பெட்டியை பார்வையிட மன்னர் சார்லெஸ் நாடாளுமன்றத்திற்கு காரில் வருகை தந்துள்ளார்.

    அப்போது நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே மன்னரின் கார் வந்தபோது ரோலர் ஸ்கேடிங் மூலம் ஒரு நபர் பாதுகாப்பு காவலர்களை மீறி சாலையின் குறுக்கே வந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டு சுதாரித்த பாதுகாப்பு காவலர்கள் அந்த நபரை பிடிக்க சென்றனர். காரின் மீது அந்த ஸ்கேடர் மோதச் சென்ற நிலையில், அந்த நபரை பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபெத் இறுதிச்சடங்கு திரையிடல்

    ஸ்கேடர் மன்னரின் காரில் மோதச் செல்லும் காணொலியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒன்று என காவல்துறை கூறியுள்ளது.


    அந்த நபர் தவறான குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கில் அவர் மன்னரின் கார் அருகே செல்லவில்லை என காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Britain, Viral Video

    அடுத்த செய்தி