ஹோம் /நியூஸ் /உலகம் /

கடலில் சர்ப்பிங் செய்யும் நாய்கள்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

கடலில் சர்ப்பிங் செய்யும் நாய்கள்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

சர்ப்பிங் செய்யும் நாய்கள்

சர்ப்பிங் செய்யும் நாய்கள்

சர்பிங் செய்யும் போது அந்த இரண்டு நாய்களும் பயப்படாமல் முன் வந்து நிற்கும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

நாய்கள் இயல்பாக நீச்சல் அடிக்கும் திறன்கள் பெற்றவை. பொதுவாகவே தண்ணீரை பார்த்து அவ்வளவு பயப்படாத நாய்கள், கடலில் சர்பிங் செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பிஜன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரு நாய்களுடன் கடலில் ஒருவர் சர்பிங் செய்துவரும்போது, அந்த நாய்கள் பயப்படாமல் உடன் வருவதை பார்க்க முடிகிறது. அந்த நாய்களும் விழுந்துவிடாமல் இருக்க ஒரே நிலையில் தங்களை வைத்துக்கொள்கின்றன.

ஒரு நாய் சர்பிங் செய்பவர் முதுகில் ஏறி நிற்கிறது. மற்றொரு நாய், பயப்படாமல் அந்த பலகையின் முன் வந்து நிற்கிறது. இரண்டு நாய்களும் கரையை அடைந்த உடன் துள்ளி குதித்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது.

பலரும் இந்த வீடியோவை ரசித்து தங்களின் கம்மெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “இந்த வீடியோவை நான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை” என பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், “அந்த நாய்கள் கடலில் விழுந்திருந்தால், அதுவால் மீண்டும் கரைக்கு நீந்தி வர முடியுமா” என கேட்டுள்ளார். இன்னொருவர், “இது நம்பிக்கையை சார்ந்தது. அந்த மனிதர் அவரின் சர்பிங் போர்டையும், அந்த நாய்கள் அந்த மனிதரையும் நம்புவதால் அவர்கள் கடலில் விழவில்லை” என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இன்னொருவர், “என்னால நேராக நடக்ககூட முடியாது. ஆனால் இந்த நாய்கள் நிலை தடுமாறாமல் இருக்கின்றன” என நகைச்சுவையாக எழுதியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த பிஜன். “அருமையான வீடியோ” என எழுதி பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Beach, Dog, Trending Videos