"வீடியோ கேம் அதிகளவில் விளையாடுவது ஒரு வகை மனநோய்": உலக சுகாதார நிறுவனம்

சர்வதேச நோய்களின் வகைகளை உலக சுகாதார நிறுவனம் இதுவரை 11முறை பட்டியலிட்டுள்ளது.

Tamilarasu J | news18
Updated: May 29, 2019, 12:49 PM IST
வீடியோ கேம்
Tamilarasu J | news18
Updated: May 29, 2019, 12:49 PM IST
வீடியோ கேம் பிரியரா நீங்கள், உங்களுக்கான எச்சரிக்கை செய்தி இது.

வீடியோ கேமை பற்றி மட்டுமே அதிகநேரம் சிந்தித்து, தொடர்ச்சியாக விளையாடி வருவது ஒரு வகையான மனநோய் என்று, உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வீடியோ கேமிலேயே மூழ்கிக் கிடப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


சர்வதேச நோய்களின் வகைகளை, உலக சுகாதார நிறுவனம் இதுவரை 11 முறை பட்டியலிட்டுள்ளது.

இதில் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியிலில் கேமிங் டிஸ்ஆர்டர் என்பது ஒரு நோய் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICD-11 என்ற இந்த பட்டியல் சென்ற ஆண்டு ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது உலக சுகாதார சபையில் உறுப்பினர் நாடுகள் அறிந்துக்கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  2022-ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...