150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்... மூழ்கும் வெனிஸ் நகரம்..!

இதுவரையில் வெள்ளம் ஏற்படுத்திய சேதாரம் 1 பில்லியன் யூரோக்கள் என அவசரகால சிறப்பு கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்... மூழ்கும் வெனிஸ் நகரம்..!
வெனிஸ்
  • News18
  • Last Updated: November 19, 2019, 3:17 PM IST
  • Share this:
வெனிஸ் நகரத்தில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் வரலாற்றுச் சின்னங்கள் பல பாதிக்கப்பட்டு வருகின்றன.

இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் தற்போது சுமார் 5 அடி(150செ.மீ) உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 1872-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் வெனிஸ் நகரம் இத்தகைய துயரத்தை அனுபவித்து வருகிறது. வானிலை இன்னும் மோசமான நிலையை அடைந்து வெள்ளம் 160 செ.மீ ஆக அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் உடன் இணைந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெனிஸ் நகர கடற்பகுதிகளில் பெரும் அலை எழுந்து வருகிறது. இதனால், நகரின் துயர் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.


இதுவரையில் வெள்ளம் ஏற்படுத்திய சேதாரம் 1 பில்லியன் யூரோக்கள் என அவசரகால சிறப்பு கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் கடுமையான மழைபொழிவும் நிலையை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது.

மேலும் பார்க்க: ஹாங்காங் போராட்டம் போல் நமக்கும் நடக்கலாம் - சிங்கப்பூரை எச்சரிக்கும் அமைச்சர்!
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading