• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கிருமிநாசினி தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் மதுபான தொழிற்சாலை...!

கிருமிநாசினி தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் மதுபான தொழிற்சாலை...!

சானிடைஸர் (கோப்புப்படம்)

சானிடைஸர் (கோப்புப்படம்)

"மது தயாரிப்பை 60 சதவீதம் வரை குறைத்து, அதற்கு பதிலாக கிருமி நாசினியை தயாரித்து வருகிறது"

  • Share this:
    வெனிசுலாவில் மதுபான ஆலை ஒன்று மதுவுக்குப் பதிலாக கிருமி நாசினியைத் தயாரித்து வழங்கி வருகிறது.

    கொரோனாவை தடுக்க ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினியை கொண்டு கைகழுவ வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் சூழலில், வெனிசுலாவில் இத்தகைய கிருமி நாசினிகள் கிடைப்பது அரிதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன.

    இந்நிலையில் வெனிசுலாவின் முன்னணி மது ஏற்றுமதி நிறுவனமான ரம் சான்டா தெரெசா மது தயாரிப்பை 60 சதவீதம் வரை குறைத்து, அதற்கு பதிலாக கிருமி நாசினியை தயாரித்து வருகிறது.

    இங்கு 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 3,000 பாட்டில்கள் கிருமிநாசினியை தயாரிக்கின்றனர். இவற்றை மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ரம் சான்டா தெரெசா நிறுவனம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: