என்னைக் கொல்லவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்! வெனிசுலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

வெனிசுலாவுக்கு அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

news18
Updated: January 31, 2019, 2:16 PM IST
என்னைக் கொல்லவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்! வெனிசுலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா
news18
Updated: January 31, 2019, 2:16 PM IST
தன்னைக் கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரா குற்றம் சாட்டியிருந்தார். அதனையடுத்து, அமெரிக்காவுடனான, அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதனையடுத்து, வெனிசுலாவுக்கு அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த நிலையில், தன்னை கொலை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ‘என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த கொலைகாரக் கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு நாள் எனக்கு ஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் தான் பொறுப்பாவார்கள். எனக்கு, எனது நாட்டு பாதுகாப்பு படையும், ரஷிய அதிபர் விளாட்மிர் புதினும் என் பின்னால் உள்ளனர்’என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது. குறிப்பிடத்தக்கது.
Loading...
Also see:

First published: January 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...