ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்ட மசோதா: வாட்டிகன் எதிர்ப்பு!

வாட்டிகன் எதிர்ப்பு

கடந்த 17ம் தேதி இத்தாலியின் தூதருக்கு வாட்டிகன் தரப்பில் கடிதம்  தரப்பட்டுள்ளது. இத்தாலிக்கும் வாட்டிகனுக்கும் இடையேயான உறவுகளின் வரலாற்றின் இதுவரை இல்லாத செயல் என்று இந்த மசோதாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது

  • Share this:
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இத்தாலியின் சட்டமசோதாவுக்கு வாட்டிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கை, திருநர் ஆதரவாளரும் அரசியல் தலைவருமான அலெக்சாண்ட்ரோ ஜான் பெயரில் ஜான் சட்டமசோதா இத்தாலியின் கீழ் அவையில் கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இம்மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டமசோதா, அவர்களுக்கு எதிராக யாராவது  வன்முறையில் ஈடுபட்டால், பாகுபாடு காட்டினால் தண்டனை அளிக்க வகை செய்கிறது.  இந்த சட்டமசோதாவை நிறைவேற்ற இத்தாலி முனைப்பு காட்டிவரும் சூழலில், வாட்டிகன் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இது தொடர்பாக கடந்த 17ம் தேதி இத்தாலியின் தூதருக்கு வாட்டிகன் தரப்பில் கடிதம்  தரப்பட்டுள்ளது. இத்தாலிக்கும் வாட்டிகனுக்கும் இடையேயான உறவுகளின் வரலாற்றின் இதுவரை இல்லாத செயல் என்று இந்த மசோதாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாட்டிகனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும்  1929ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை  இந்த மசோதா மீறுவதாக வாட்டிகன் நம்புகிறது.  ஓரினச் சேர்க்கையாளர் விவகாரத்தில் கத்தோலிக்கர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியாத சூழலை உருவாக்கும் என அவர்கள் தரப்பு வாதமாக உள்ளது. அதேவேளையில், இந்த சட்டமசோதா யாருடைய மதச் சுதந்திரத்தையும் பாதிக்காது என அலெக்சாண்ட்ரோ ஜான் தெரிவித்துள்ளார்
Published by:Murugesh M
First published: