• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை சேதம்... பிரதமர் கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை சேதம்... பிரதமர் கண்டனம்!

மகாத்மா காந்தி சிலை சேதம்

மகாத்மா காந்தி சிலை சேதம்

மகாத்மா காந்தி சிலை சேதப்பட்டது தொடர்பாக கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஆஸ்திரேலியாவில் இந்தியா பரிசாக கொடுத்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. தலை பகுதியை உடைக்க முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் முக்கிய பகுதிகளில் ஒன்று மெல்போர்ன். இதன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த மையத்திற்கு இந்த்யா சார்பில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை பரிசாக வழங்கப்பட்டது. இந்த சிலையை ஆஸ்திரேலிய- இந்திய சமூக மையத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரீசன் திறந்துவைத்தார்.

    சிலை திறக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் கழுத்துப் பகுதியில் சேதப்படுத்தி தலையை துண்டிக்க முயற்சி செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சக்திவாய்ந்த டூல்ஸ்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தியுள்ள விக்டோரியா பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். மர்ம நபவர்களையும் அவர்கள் தேடிவருகின்றனர்.

    இந்த செயலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற நாடாக உள்ளது. இத்தகைய சூழலில் கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர், இந்த அளவு அவமரியாதையை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது... இதற்கு காரணமானவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்திற்கு பெரும் அவமரியாதையை  ஏற்படுத்தியுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள்  வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: Kihnu தீவுகள்: 90% பெண்கள் மட்டுமே வாழும் அதிசய தீவு - ஆண்கள் எங்கு போனார்கள்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: