Home /News /international /

காதலர் தின வாரம் - சாக்லேட் டே கொண்டாடும் இளைஞர்கள்

காதலர் தின வாரம் - சாக்லேட் டே கொண்டாடும் இளைஞர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Valentine Week - Chocolate Day : சோகமான நாட்களில் மனதைத் தேற்றும் சாக்லேட் போல், நீ என் வாழ்வில் இனிப்பாய் வந்தாய்

    காதலர் தின வாரத்தின் மூன்றாவது நாளான இன்றைய தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் சாக்லேட் டே-வாக இனிமையாக கொண்டாடுகின்றனர்.

    உலகெங்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வேலன்டைன்ஸ் டே தற்போது மற்றொரு பரிணாம வளர்ச்சியைப் பெற்று. வாரம் முழுக்க கொண்டாடப்படும் நிகழ்வாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டே-வாகவும், நேற்றைய தினம் காதலைச் சொல்லும் புரபோஸ் டேவாகவும் கொண்டாடப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான இன்று இனிமையான சாக்லேட் டேவாக காதலர்களால் கொண்டாடப்படுகிறது.

    இனிப்பு எல்லாவித மகிழ்ச்சியான தருணங்களிலும் பரிமாறக் கூடியது. காதலர்களிடையே சாக்லேட் போன்ற இனிப்பு பரிமாற்ற்தின் முக்கியத்துவத்தை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அவர்களுக்கு சாக்லேட்டை பகிர்ந்து கொள்ள இதை விட வேறு இனிமையான தருணம் இருக்கவும் முடியுமோ. சாக்லேட் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுவதால் நண்பர்களுக்கும் அவற்றை காதலர்கள் தந்து மகிழலாம். சாக்லேட்டை மனதிற்கு நெருக்கமானவர்களுக்குத் தந்து உங்களது மனவோட்டத்தை வெளிப்படுத்தவதில் தவறே இல்லை!

    சாக்லேட் டே பலருக்கு புதிதாக தோன்றினாலும் அதற்குள் அழகான ஆயிரம் வாழ்த்து வரிகளத் தேடிப்பிடித்து இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். நீதான் என் வாழ்வின் சாக்லேட், நீயில்லாத வாழ்க்கையில் இனிமையே இல்லை என்றும், சோகமான நாட்களில் மனதைத் தேற்றும் சாக்லேட் போல், நீ என் வாழ்வில் இனிப்பாய் வந்தாய் என்றும் இனிமையான காதல் வரிகளை இணையவாசிகள் இழைந்தோட விட்டு சாக்லேட் டேவை கொண்டாடி வருகின்றனர்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chocolate, February, Lovers, Valentine day, Valentine Gifts, Valentine Week

    அடுத்த செய்தி