• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்திய 'ரா' உளவு அமைப்பு குறித்து சிறிசேனா அவ்வாறு கூறவில்லை: இலங்கை அரசு

இந்திய 'ரா' உளவு அமைப்பு குறித்து சிறிசேனா அவ்வாறு கூறவில்லை: இலங்கை அரசு

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா.

இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் நல்லுறவுக்கும், இரு தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்நோக்கம் கொண்டவர்களால் இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் உளவு அமைப்பான ரா தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியதாக வெளியான செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    நேற்று கொழும்புவில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தன்னைக் கொல்ல இந்தியாவின் ரா உளவு அமைப்பு சதிசெய்ததாக சிறிசேனா பேசியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை சிறிசேனாவின் ஆலோசகர் ஷிரால் லக்திலகா மறுத்திருந்தார். பல நாடுகளில் உள்ள உளவு அமைப்புகள், தலைவர்களை கொலை செய்வதற்கு முயற்சிப்பதை பொதுவாக குறிப்பிட்டே அதிபர் பேசியதாக லக்திலகா தெரிவித்தார்.

    இந்நிலையில் சிறிசேனா குறித்து வெளியான செய்திக்கு இலங்கை அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சிறிசேனவின் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிசேனவை சந்தித்த இந்திய தூதரிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் நல்லுறவுக்கும், இரு தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்நோக்கம் கொண்டவர்களால் இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறிசேன, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: