Home /News /international /

வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது... உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை

வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது... உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை

பாகிஸ்தான் தேசிய கொடி

பாகிஸ்தான் தேசிய கொடி

உத்தரப் பிரதேசம் மாநிலம், பெதுபர் முஸ்தகில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உத்தரப் பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவது நாளை(ஆகஸ்ட்15) உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரில், இளைஞர் ஒருவர் தனது வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    தெரயா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெதுபர் முஸ்தகில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. காவல்துறை கவனத்திற்கு சென்றதை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து பாகிஸ்தான் கொடியை போலீசார் அகற்றினர்.

    இதையும் படிங்க: மூவர்ண கொடியை போர்த்தி கொண்ட காளகஸ்தி கோவில் கோபுரம்

    இதையடுத்து அந்த வீட்டின் இளைஞர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில் அவரது குடும்பத்தினர் தடுத்த போதும் அதனை கேட்காமல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தெரிய வந்துள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 14) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Police, Uttar pradesh

    அடுத்த செய்தி