ஹோம் /நியூஸ் /உலகம் /

பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்: விபத்தில் முடிந்த சோகம்!

பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்: விபத்தில் முடிந்த சோகம்!

ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்

ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்

கடந்த ஜூன் 3-ம் தேதி தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த போது காரை எடுத்துக்கொண்டு கலிபோர்னியா செல்ல முயன்ற சிறுமிகள் இறுதியில் விபத்தில் சிக்கிய சோகச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் 2ம் தேதியன்று அமெரிக்காவின் உட்டா பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்த்த 9 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் கலிபோர்னியாவுக்குச் செல்வதற்காக பெற்றோரின் காரைத் திருடியுள்ளனர். பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தை பயன்படுத்தி அதிகாலை 3 மணிக்கு எழுந்த சிறுமிகள், தங்கள் பெற்றோரின் Chevy Malibu வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு, மேற்கு ஜோர்டானில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து அடித்தளத்தின் வழியாக "சம்மர் அட்வென்ச்சர்" பயணத்திற்காக கலிபோர்னியா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மூத்த சகோதரி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தபடியும், இளைய சகோதரி பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடியும் சவாரி செய்தனர். ஆச்சர்யம் என்னவென்றால் மேற்கு ஜோர்டானிலிருந்து உட்டாவின் 201 அதிவேக நெடுஞ்சாலை உட்பட மேற்கு பள்ளத்தாக்கு நகரம் வரை சுமார் 10 மைல் தூரம் வாகனத்தை சிறுமி ஓட்டியுள்ளார்.

ALSO READ | ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

ஆனால் இறுதியில் ஒரு ட்ரக் மீது காரை மோதியுள்ளனர். இது குறித்து மேற்கு ஜோர்டான் காவல்துறையினருடன் துப்பறியும் ஸ்காட் லிஸ்ட் என்பவர் ஏபிசி 4 பத்திரிகையிடம் கூறியதாவது, "விசாரணையில் சகோதரிகள் கலிபோர்னியாவுக்கு "கோடைகால சாகசத்திற்காக" செல்ல ஆசைப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அங்கு கடலில் நீந்தி டால்பின்களைப் பார்க்க விரும்பியதாக" கூறியுள்ளனர்.

மேலும் கடந்த ஜூன் 3-ம் தேதி தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர். சாலையில் விபத்து நடந்துள்ளது தெரியவந்த பிறகு சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஒரு பெரிய டிரக் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்து கிடந்தது.

ஆனால் ட்ரைவர் இருக்கையை பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இருக்கையில் சிறுமிகள் அமர்ந்திருந்ததனர். இந்த இரு சிறுமிகளும் மேற்கு ஜோர்டான், உட்டாவிலிருந்து ஒரு நெடுஞ்சாலை மற்றும் ஒரு தனிவழிப்பாதை வழியாக வந்து விபத்தில் சிக்குவதற்கு முன்பு, சுமார் 10 மைல் தூரம் பயணித்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது.

சிறுமிகள் சீட் பெல்ட் அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் எந்த ஒரு காயமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். இருப்பினும், கார் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், டிரக் இழுத்துச்செல்லப்பட வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரழிவு குறித்து ஒன்றுமே தெரியாத பெற்றோருக்கு, துப்பறியும் நபரால் தகவல் வழங்கப்பட்டது. தங்கள் குழந்தைகளின் ஜாலிரைடு பற்றியும், சிறுமிகள் தற்போது வீட்டில் இருந்து வெளியேறியதை கேட்ட தம்பதி அதிர்ச்சியடைந்து தங்கள் குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாமல் திகிலடைந்தனர்.

ALSO READ | ஓவர்டைம் வேலை பார்த்தால் உயிருக்கே ஆபத்தா..?ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து ஏபிசி 4-இடம் பெற்றோர்கள் பேசியதாவது கலிபோர்னியா பயணத்தைப் பற்றி குழந்தைகள் முன்னிலையில் முன்னர் பேசியதாக தெரிவித்தனர். இதுவே குழந்தைகளைத் தாங்களாகவே வாகனத்தை எடுத்து ஓட்டுவதற்கு தூண்டியுள்ளது என அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிய ட்ரக் டிரைவர் கூறியதாவது, முதலில் காரை தவறான பாதையில் ஓட்டுவதைக் கண்டதும், யார் காரை ஓட்டுகிறாரோ அவர் குடிபோதையில் அல்லது பலவீனமாகியிருக்கலாம் என்று நினைத்து போலீஸை அழைத்திருந்தேன்.

ALSO READ |  உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த 8 இந்திய பல்கலை எவை?

ஆனால் அந்த கார் விரைவாக வந்து டிரக்கின் மீது மோதியது என்று கூறியுள்ளார். பள்ளி பேருந்து ஓட்டுநரான ட்ரக் டிரைவர் டேனியல் லெப்ளாங்க் செய்தி ஊடகத்திடம் கூறுகையில், விபத்துக்குப் பிறகு, அவர் இருக்கையில் இருந்த நபரை தேட முயன்றார். ஆனால் முன் இருக்கையில் இரண்டு சிறுமிகளை மட்டுமே பார்த்ததாக கூறியுள்ளார்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: California, Viral