ஹோம் /நியூஸ் /உலகம் /

இனி கஞ்சாவை உபயோக்கிக்காலம்... சட்டப்படி அனுமதி வழங்கும் ஜெர்மனி!

இனி கஞ்சாவை உபயோக்கிக்காலம்... சட்டப்படி அனுமதி வழங்கும் ஜெர்மனி!

கஞ்சா செடி

கஞ்சா செடி

Germany legalsie cannabis : ஜெர்மனியின் போதைப் பொருளான கஞ்சாவை பயன்படுத்த சட்டப்படி அனுமதி வழங்கப்படவுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaGermanyGermany

  ஜெர்மனி கஞ்சா உபயோகத்திற்கு என்று சட்டம் கொண்டுவரத் திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம் கஞ்சாவை அரசு அனுமதியுடன் விற்கவும், உட்கொள்ளவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உலகம் முழுவதும் பல நாடுகளில் கஞ்சாவை உபயோகிக்க மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ள நிலையில் ஜெர்மனி தற்போது கஞ்சா உபயோகத்திற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், ஜெர்மனி அரசால் கொண்டுவரப்படும் நிலையில், ஜெர்மனி உறுப்பினராக இருக்கும் ஐரோப்பியன் யூனியனிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

  அதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவிற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் வரும் 2024 ம் ஆண்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது. ஜெர்மனியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அரசு முந்தைய வருடம் இதற்கான வாக்குறுதியை அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சாவைப் பற்றிய விழிப்புணர்வு அதனை உபயோகிக்கும் முறை போன்றவற்றை மக்களுக்குக் கொண்டுவரவுள்ளனர். இந்த திட்டத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

  எதற்கெல்லாம் அனுமதி:

  • கஞ்சா உபயோகத்திற்கான புதிய சட்டம் படி, அனுமதி வழங்கப்பட்ட மருந்துக்கடைகள் மற்றும் கடைகளில் மக்கள் கஞ்சாவை வாங்கிக்கொள்ளலாம்.
  • மேலும் ஒரு நபர் சுமார் 30 கிராம் வரை கஞ்சாவை உபயோகிக்கலாம்.
  • அது மட்டும் இல்லாமல், ஒருவர் தனது வீட்டில் மூன்று கஞ்சா செடியை வளர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கஞ்சா உபயோகத்தில் இருக்கும் இதர நாடுகள்:

  ஐரோப்பிய யூனியனில் மால்டாவில் மட்டுமே கஞ்சா உபயோகத்தில் இருந்த நிலையில் தற்போது ஜெர்மனியில் வரவிருக்கிறது. நெதர்லாந்தில் சிறிதளவு கஞ்சா காபி கடைகளில் உபயோகிக்கப்படுகிறது.  சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளிலும் கஞ்சா சிறிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகளில் கஞ்சா மருத்துவ பயன்களுக்காக உபயோகிக்கப்படுகிறது.

  Also Read : 52 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு.. வயிற்றில் இருந்து உடல் மீட்பு!

  அமெரிக்காவில் தான் பெரும்பாலான மாகாணங்களில் கஞ்சா மருத்துவ பயனுக்காக உபயோகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கனடா, உருகுவே, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Cannabis, Germany