விளையாட்டு என்றாலே குதூகலம் தான். பொழுது போக்க கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போக போக சுவாரசியங்கள் நிறைந்ததாகவும், விறுவிறுப்பு நிறைந்ததாகவும், வித்தியாசமான முறைகளை கொண்டதாகவும் மாறிவிட்டது. மனிதர்களும் புதிது புதிதாக விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டுபிடித்து நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இது போன்ற ஒரு வித்தியாச விளையாட்டு நிகழ்வு தான் நடந்துள்ளது. மோட்டார்கள் இன்றி சோப்பை வைத்து வழுக்கிக்கொண்டு வண்டி ஓட்டும் விநோத முறையில் நடைபெற்ற சோப்பு பாக்ஸ் பந்தயம், ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. தடைகளை கடக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தின.
ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களில் நடைபெறும் கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் உலகப் புகழ்பெற்றவை. காரணம் '
தப்பினால் மரணம்' என்ற வகையில் அந்த போட்டிகளில் ஆபத்து நிறைந்திருக்கும். இது ஒருபுறம் இருக்க, ரெட்புல் நிறுவனம் சார்பில் ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் Soap Box Race என்ற பெயரில் விநோத போட்டி, அமெரிக்காவில் அயோவா மாகாணத்தில் ஜூன் 18 அன்று நடத்தப்பட்டது.
சோப்பு பெட்டி பந்தயத்தில், மோட்டார் இல்லாமல் விதிவிதமான கருப்பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் உயர்வான இடத்தில் இருந்து சரிவான பாதையை நோக்கி தள்ளிவிடப்படும்

இந்த பந்தயத்தில் பயன்படுத்தப்படும் வாகனம் கைவினை பொருள் போன்று, கையினால் கட்டமைக்கப்பட வேண்டும். இதில், மோட்டார் எதுவும் பொருத்தபட்டு இருக்காது. இதனால, உயரத்தில் இருந்து பாய்ந்து வரும் வாகனத்தை கட்டுப்படுத்துவது எளிதானது இல்லை என்பதால், சில வாகனங்கள் விபத்தில் சிக்கி சுக்குநூறாயின.
இடையே, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ஆட்டம், பாட்டத்துடன் போட்டி களைகட்டியது.
சர்வதேச யோகா தினம்: மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா செய்த பிரதமர் மோடி
வேகத்தடையில் ஏறி வரும் போதும் சோப்பு பாக்ஸ் வண்டியுடன், வீரர்களும் அந்தரத்தில் பறக்கும் வேடிக்கையான காட்சியும் அரங்கேறியது. ஒருசில வீரர்கள், வாகனத்தின் உடைந்த பாகங்களுடன் இலக்கை நோக்கி ஓடியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
குறைந்த நேரத்தில் வாகனத்தை சிறப்பாக ஓட்டிச் சென்று, இலக்கை எட்டிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.. சோப்பு பாக்ஸ் என்ற விநோத போட்டி, ஐரோப்பாவில் மட்டும் இன்றி, இந்தியாவிலும் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.