அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சத்துக்கு இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை பாதியளவுக்கு இருப்பதால் சுகாதாரத்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருவமான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளிடையே அசுர வேகத்தில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இத்தொற்று தடுப்பூசி திறனை கணிசமாக குறைக்கும் ஆற்றல் கொண்டது எனவும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தொற்று வீரியமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சம் என்ற அளவில் பதிவாகி வருகிறது.
Also read: டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!
இதனிடையே அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை முன்பு எப்போதையும் விட பெருமளவு அதிகரித்துள்ளதாக கவலை எழுந்துள்ளது.
டிசம்பர் முதல் வாரம் தொடங்கி தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் பதிவான பாதிப்புகளில் பாதியளவுக்கு 5 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத நிலையில் எந்த அளவுக்கு பாதிப்பின் தாக்கம் குழந்தைகளிடையே ஏற்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Also read: பெண்கள் தனியாக பயணம் செய்ய தாலிபான்கள் தடை - ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்
சமீபத்தில் விழாநாட்களால் அமெரிக்க மாகாணங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு பரிசோதனைகள் செய்வதில் சுணக்க நிலை நீடிப்பதாகவும் வரும் நாட்களில் இந்த மந்த நிலையை போக்க சுகாதாரத்துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவத்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.