ராணுவ தாக்குதல்களை இரு நாடுகளும் கைவிட வேண்டும் - அமெரிக்கா அட்வைஸ்
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை வலியுறுத்தியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைக் பாம்போ
- News18
- Last Updated: February 27, 2019, 4:29 PM IST
ராணுவ தாக்குதல்களை இரு நாடுகளும் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்போ கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேசியதாகவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியையும் தான் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்போ, பதற்றத்தை தவிர்க்க பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, ராணுவ தாக்குதல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை வலியுறுத்தியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Live Updates: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க
Also see...
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேசியதாகவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியையும் தான் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்போ, பதற்றத்தை தவிர்க்க பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, ராணுவ தாக்குதல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
Live Updates: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க
Also see...