நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை தரும் செயலி!

கலிஃபோர்னியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

Tamilarasu J | news18
Updated: March 14, 2019, 7:01 PM IST
நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை தரும் செயலி!
நிலநடுக்கம் கண்டறியும் செயலி
Tamilarasu J | news18
Updated: March 14, 2019, 7:01 PM IST
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நிலநடுக்கம் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலான செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Shake Alert LA என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாஹாண  நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நொடிகளுக்கு முன்பு மின்னஞ்சலிலோ, செய்தி அறிவிப்பாகவோ மக்களுக்கு எச்சரிக்கை தரப்படும்.

அமெரிக்க புவியியல் மையத்தோடு இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுகிறது. இவற்றில் பலவற்றின் அளவு மிகவும் குறைவு என்றாலும், மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...