முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் தீயாய் பரவும் குரங்கம்மை.. சுகாதார அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் தீயாய் பரவும் குரங்கம்மை.. சுகாதார அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவில் உள்ள சுமார் 17 லட்சம் தன்பாலின உறவு கொள்பவர்களை அந்நாட்டு அரசு கண்காணித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் குரங்கம்மை தொற்று மிகத் தீவிரமாக பரவி வருவதால் அங்கு சுகாதார அவசர நிலையை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 7,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாகாணங்களில் தொற்று பரவலின் வீரியம் அதிகம் காணப்படுவதால் இதை தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

90 சதவீதத்திற்கும் அதிகமான குரங்கம்மை பரவலானது தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களே என்பது தெரியவந்துள்ளது. உடல் உறவு மூலம் மட்டுமே இந்த நோய் ஏற்படுவதில்லை என்ற போதிலும், இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மையினர் தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிகிறது. இந்த பாதிப்பு தன்பாலின ஆண்களுக்கே அதிகம் காணப்படுவதால், இவர்கள் உறவில் ஈடுபடும் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை தெரிவித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள சுமார் 17 லட்சம் தன்பாலின உறவு கொள்பவர்களை அந்நாட்டு அரசு கண்காணித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதல்கட்டமாக 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. உலகளவில் இதுவரை 81 நாடுகளில் 26,000 அதிகமானோருக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4500க்கும் மேற்பட்டோருக்கும், ஜெர்மனியில் 2800க்கும் மேற்பட்டோருக்கும் இந்த தொற்று பரவியுள்ளது.

இதையும் படிங்க: தைவானுக்கு எதிராக சீனா போர் பயிற்சி.. ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்ததால் பதற்றம்..

1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

இந்த தொற்று பாதித்தவர்கள் 5-21 நாள்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும், பாதிப்பு அறிகுறிகள் சருமத்தில் தென்படுவதற்கு 1-2 நாள்களுக்கு முன்னர் அந்நபருக்கு நோய் பரவியிருக்கம் என சுகாதாரத்துறை வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Monkeypox, USA, WHO