அரசின் இலவச திட்டம் அல்லது சலுகை திட்டம் என்றால், அதை தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த செய்தி வெளிவந்திருக்கிறது. ஏழைகளுக்கான நலத் திட்டங்களை அபகரிப்பு செய்வதில் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களும் விதிவிலக்கு அல்ல என்பதை இது நிரூபிக்கிறது.
அமெரிக்காவில் அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்நாப் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி வெண்ணெய், பீன்ஸ் மற்றும் மயோனீஸ் போன்ற ஒருசில உணவுப் பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளலாம். ஸ்நாப் திட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, அதில் ரூ.9 கோடி மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் குவித்துள்ளனர் 2 பெண்கள். அவர்களை அமெரிக்க காவல் துறை கண்டறிந்து கைது செய்திருக்கிறது.
also read : ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு!
கைது செய்யப்பட்ட 51 வயதான அனா ரியோஜா மற்றும் 55 வயதான மரியா கான்சுலே டீ உரேனோ ஆகிய இருவரும் பிரவுன்ஸ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மோசடி நடந்தது எப்படி?
ஸ்நாப் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வாங்கும் போது, பயனாளிகள் குறிப்பிட்ட மதிப்பு வரையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தொகையை பிஓஎஸ் மெஷின் மூலமாக செலுத்தி விட வேண்டும்.
இதில் தான், பிற சதியாளர்களுடன் இணைந்து இந்த இரண்டு பெண்களும் மோசடியை அரங்கேற்றியுள்ளனர். அதாவது, பிற பயனாளிகளின் ஐடியை வைத்து 715 மோசடியான பரிவர்த்தனைகள் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்துள்லனர். குறிப்பாக 49.1 டன் அமெரிக்கன் வெண்ணெய், 22,730 லிட்டர் மயோனீஸ், 1.6 டன் போல்கர்ஸ் காஃபி மற்றும் 1.4 டன் மசித்த உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை இவர்கள் வாங்கியுள்ளனர். வாங்கப்படும் பொருட்கள் அனைத்தும் மற்றொரு கூட்டுச் சதியாளர் மூலமாக மெக்ஸிக்கோவுக்கு கடத்தப்பட்டுள்ளது.
also read : விவாகரத்து தரவில்லையென்றால் வீதியில் நிர்வாணமாக செல்வேன்- கணவனை மிரட்டிய மனைவி
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் ரூ.9 கோடி அளவுக்கான உணவுப் பொருட்களை அவர்கள் வாங்கியுள்ளனர்.
தண்டனை விவரம்:
அனோ ரியோஜா மற்றும் மரியா மற்றும் மரியா ஆகியோர் செய்த குற்றம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் நீருபிக்கப்பட்டது. இருவருக்கும் முறையே ரூ.7.4 கோடி மற்றும் ரூ.9.8 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இது தவிர, இருவருக்கும் 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும், இவர்களை கண்காணிப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.