முகப்பு /செய்தி /உலகம் / 13 வயது சிறுவனை கட்டாயடுத்தி உடலுறவு... குழந்தை பெற்ற 31 வயது பெண்... அதிர்ச்சி சம்பவம்

13 வயது சிறுவனை கட்டாயடுத்தி உடலுறவு... குழந்தை பெற்ற 31 வயது பெண்... அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி அவனுடன் கட்டாய பாலியல் உறவு கொண்டு குழந்தை பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashingtonWashington

அமெரிக்காவின் கொலடராடோ மாகாணத்தில் வசித்து வரும் 31 வயது பெண் ஆண்ட்ரியா செர்ரானோ. இவர் கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுடன் பழகி நட்பு பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அவன் தனியாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதன் விளைவாக அந்த பெண் ஆண்ட்ரியா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் கொலராடோ காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். ஆண்ட்ரியாவும் தனது தரப்பில் வழக்கறிஞரை வைத்து இந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த சிறுவனுடான உறவின் மூலம் கர்ப்பம் தரித்திருந்த ஆண்ட்ரியாவுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில் சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க கொலராடோ மாகாண சட்ட விதிகளை வழக்கறிஞர் மூலம் ஆண்ட்ரியா பயன்படுத்திவருகிறார்.

31 வயது பெண் ஆண்ட்ரியா செர்ரானோ

அந்த 13 வயது சிறுவனோ குழந்தைக்கு தந்தை ஆகிவிட்டான். தனது மகனுக்கு அநீதி நிகழ்ந்து விட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார். ஒரு வேளை பாலினம் மாறி இந்த சம்பவம் நடைபெற்றிருந்தால் இப்படியா வழக்கை விசாரிப்பார்கள்.

இதுவே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு 31 வயது ஆண் என்றும் பாதிக்கப்பட்ட 13 வயது பெண் என்றால் கடுமையான தண்டனை அல்லவா வழங்கி இருப்பார்கள். ஆண்ட்ரியா பெண் என்பதால் அவர் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என தாயார் வேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பானது மே மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Rape, Sexual abuse, USA